'இலங்கை அணியில் லசித் மாலிங்கவை ஈடுசெய்ய எந்த வீரரும் இல்லை'

Sep 20, 2014, 04:39 PM

Subscribe

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

இதனால் சுமார் குறைந்தது 4 மாதகாலத்திற்கு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டிய நிலைக்கு லசித் மாலிங்க தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் லசித் மாலிங்கவின் பங்கு பற்றியும் அவருக்கு மாற்றீடாக இலங்கை அணித் தெரிவாளர்களுக்கு உள்ள தெரிவுகள் என்ன என்பது பற்றியும் இலங்கையின் சூரியன் எப்எம் வானொலியின் விளையாட்டுத்துறை செய்தியாளர் தில்லையம்பலம் தரணிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தக் கருத்துக்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.