'லவ் ஜிகாத்' என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இயற்றிய பிரசாரமா?
Share
Subscribe
இந்தியாவில் முஸ்லிம்கள் அல்லாத இளம் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதல் வயப்படுத்தி, திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் செய்தி ஊடகம் ஒன்றிடம் வௌியிட்டுள்ளமை தொடர்பில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.
"லவ் ஜிஹாத்" என்ற வார்த்தையை இயற்றி, அதனை பிரசாரப்படுத்தும் செயல்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஈடுபட்டுவருவதாகவும் அந்த அமைப்புகள் தப்பிக்க ஏதுவாக இந்தப் பிரச்சனையை தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் திசைதிருப்புவதாகவும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூறியுள்ளது.
