அக்டோபர் 15, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 15, 2014, 05:46 PM

Subscribe

இன்றைய (15-10-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் வடபகுதிக்கு அந்நிய நாட்டவர் செல்வதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை என்று இலங்கை இராணுவம் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்;

இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கான திட்டத்தை இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது குறித்த செய்திகள்;

சமீபத்தில் இலங்கை வடக்கில் அரசுமுறைப் பயணமாக வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வடமாகாணசபை குறித்து செய்திருந்த கடுமையான விமர்சனங்களுக்கு வடமகாணசபை முதல்வர் சி வி விக்னேஸ்வரன் இன்று பதிலளித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை செய்து கொடுப்பதற்கான திட்டத்தை இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது குறித்த செய்தி;

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு, நேற்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சையது முகமது என்பவர் விசாரணையின்போது துணை ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தி;

நிறைவாக இன்றைய பலகணியில் தமிழ்நாட்டின் தப்பாட்டம் இசையா? இழிவா என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.