அக்டோபர் 18, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-10-2014) பிபிசி தமிழோசையில்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்திய உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீனின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு சென்னை வந்து சேர்ந்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்பது தொடர்பான வழக்கில் அப்படி பணத்தை பதுக்கியிருப்பவர்கள் பட்டியலை வெளியிடமுடியாது என மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்திருப்பது குறித்த சர்ச்சை தொடர்பான செய்திகள்;
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்பது தொடர்பான வழக்கில் அப்படி பணத்தை பதுக்கியிருப்பவர்கள் பட்டியலை வெளியிடமுடியாது என மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதே நிலைப்பாட்டை முந்தைய காங்கிரஸ் அரசு எடுத்தபோது அதை மிகக்கடுமையாக விமர்சித்த நரேந்திரமோடி தற்போது பிரதமராக இருக்கும் நிலையில் அவரும் அதே நிலையை எடுத்திருப்பது அவர் இந்த பிரச்சனையில் இரட்டைவேடம் போடுவதை காட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த விமர்சனத்துக்கு பாஜக தரப்பு பதில்;
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில், கிராமவாசிகள் தன்னை சூனியக்காரி எனக்கூறி கட்டிவைத்து அடித்தார்கள் என இந்தியத் தடகள வீராங்கனை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளதைத்தொடர்ந்து மூத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியிருப்பது குறித்த செய்திகள்;
ஆளில்லாமல் பறக்கின்ற அமெரிக்க இராணுவத்தின் விண்வெளி விமானம் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் இடைவிடாது பூமியைச் சுற்றி வட்டமடித்து பறந்துவிட்டு தற்போது அமெரிக்காவில் தரையிறங்கியுள்ளது குறித்த செய்திகள்;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
