'நிவாரண நடவடிக்கைகள் பரந்துபட்டதாக இருக்க வேண்டும்'

Oct 30, 2014, 04:18 PM

Subscribe

பதுளை கொஸ்லந்தை நிலச்சரிவு பேரழிவு குறித்து பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் பல தரப்பினருக்கும் இருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலரும், சட்டத்தரணியுமான தம்பையா.

அரசாங்கம், தொழிற்சங்கங்கள், தோட்டநிர்வாகம், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

அதேவேளை இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பரந்துபட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

அவரது பிபிசிக்கான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.