அக்டோபர் 31, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (31-10-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை மலையகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மூன்றாவது நாளான இன்றும் பெரிய முன்னேற்றம் ஏற்படாதது குறித்து அந்த பணிகளை மேற்பார்வை செய்யும் ராணுவ அதிகாரி பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி
இந்த குறிப்பிட்ட பகுதி நிலச்சரிவுக்கு உள்ளாகும் ஆபத்து இருக்கும் பகுதி என்று அந்த தேயிலைத்தோட்ட முதலாளிக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று கூறும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ருஷான் ராஜதுரை பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;
இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் இன்றும் தொடரும் எதிர்ப்பு குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் மோதல்கள் பகிரங்கமாக வெடித்திருப்பது குறித்த செய்திகள்;
இரண்டாம் தலைமுறை அலைகற்றை ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி மகள் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது குறித்த செய்திகள்;
இபோலா நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான லைபீரியா சென்று இபோலா நோயாகளிக்கு சிகிச்சை அளித்து தமிழகம் திரும்பியிருக்கும் மருத்துவர் கல்யாணி கோமதிநாயகம் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.
