இந்திய ஆடுகளங்களில் இலங்கை அணியின் தடுமாற்றங்கள் எதனைக் காட்டுகின்றன?

Nov 14, 2014, 08:15 PM

Subscribe

இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வாளர்கள் எதிர்பார்த்தவாறு, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அணியை தேர்ந்தெடுக்க இந்தியத் தொடர் உதவவில்லை என்று நாட்டின் கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

'சரியான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி இந்தத் தொடரில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை. மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் தீர்மானிக்கப்படவில்லை' என்று இலங்கையின் சூரியன் எப்எம் வானொலியின் விளையாட்டுத் துறை செய்தியாளர் தில்லையம்பலம் தரணிதரன் தமிழோசையிடம் தனது கருத்தைத் தெரிவித்தார்.

உபாதை காரணமாக சிகிச்சை பெற்றுவருகின்ற லசித் மாலிங்கவை ஈடுசெய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைக் கண்டுபிடிக்கவும் இலங்கை அணித் தேர்வாளர்களால் முடியாது போயிருப்பதாகவும் தரணிதரன் கூறினார்.