நவம்பர் 15 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (15-11-2014) பிபிசி தமிழோசையில்
ஆஸ்திரேலியாவில் துவங்கியுள்ள ஜி 20 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டின் நோக்கம் மற்றும் அதற்கான பின்னணி குறித்த பிபிசியின் தகவல்கள்;
கேரளாவிலுள்ள பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை தாண்டியுள்ள நிலையில் அந்த தண்ணீர் தேக்க அளவை குறைக்கவேண்டுமென கேரள அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 28 தொழிலாளர்கள் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்டிருப்பது தொடர்பான செய்திகள்
இலங்கை நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உண்மையான எண்ணிக்கை தொடர்பில் நிலவும் குழப்பம் குறித்து இலங்கை அரசின் கருத்துக்கள்
நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
