'ஆதாரம் இருக்கிறது' என்கிறார் மகிந்த; 'பொய்' என்கிறார் சொல்ஹெய்ம்

Nov 16, 2014, 02:48 PM

Subscribe

தேர்தல் நெருங்குவதால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எரிக் சொல்ஹெய்ம் பணம் கொடுத்ததாகவும், அது தொடர்பில் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.