"தஞ்சக்கோரிக்கையாளர்களை கடலிலேயே விசாரித்து திருப்பியனுப்புவது தவறு"
Share
Subscribe
ஆஸ்திரேலியா இலங்கையிடம் 37 தஞ்சக் கோரிக்கையாளர்களை ஒப்படைத்துள்ளது என்பதை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் அலுவலம் உறுதிசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆதி கொக்கோஸ் தீவுக்கு வடக்கே நடுக்கடலில் தடுக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 38 பேரிடமும் கடலில் வைத்தே தஞ்சக்கோரிக்கை விசாரணைகள் செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியதற்காக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட 37 பேரும் விசாரிக்கப்படுகிறார்கள் என இலங்கை காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தார். கடலில் வைத்தே தஞ்சக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்ற ஆஸ்திரேலியாவின் நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருந்த பின்னணியில், ஆஸ்திரேலியா தற்போது தஞ்சக் கோரிக்கையாளர்களை இலங்கையிடம் ஒப்படைத்துள்ளது பற்றி ஆஸ்திரேலிய தமிழர் பேரவை அமைப்பின் சார்பாகப் பேசவல்ல பால விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார். இலங்கையிலிருந்து வந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் 37 பேரை கடலிலேயே விசாரித்து இலங்கைக்கு திருப்பியனுப்பிய ஆஸ்திரேலியாவின் செயல் சர்வதேச நியமங்களுக்கு முரணானது என பால விக்னேஸ்வரன் கூறினார்.
