உணவுக்காக உண்ணாவிரதம் இருந்த மீரியாபெத்தை மக்கள்; அமைச்சர் செந்தில் தொண்டமான் பதில்

Nov 29, 2014, 06:04 PM

Subscribe

மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உணவு சமையல் பொறுப்பை நேற்று 28-ம் திகதியுடன் இராணுவம் கைவிட்டுள்ளது.

இந்த நிலையில், உணவின்றி இருந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை தொடங்கியிருந்தனர்.

தோட்ட நிர்வாகத்துடன் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தாம் தலையிட்டு தீர்த்துவைத்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த, ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பழைய தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கான உணவை சமைக்கும் பொறுப்பை அவர்களின் தோட்டநிர்வாகம் தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.