ஒரு மாதம் கடந்து மீரியாபெத்தை: 'மக்கள் கைவிடப்பட்டுள்ளனர்'
Share
Subscribe
இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மீரியாபெத்தை தோட்டக் குடியிருப்பு மண்சரிவில் சிக்கி ஒருமாதம் கடந்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அரசியல்வாதிகளாலும் அரசாங்கத்தாலும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக அந்த மக்களை சந்தித்துள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உணவை சமைத்துக்கொடுத்துவந்த இராணுவத்தினர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை முதல் அங்குள்ள மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருந்ததாக மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை எம். சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
பழைய தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் அமைந்துள்ள தற்காலிக அறைகளில் தங்கியுள்ள மக்கள் உரிய இடவசதி இன்றி சிரமப்படுவதாகவும் அருட்தந்தை சத்திவேல் கூறினார்.
