"தவறான முறையில் குடிவரவை கட்டுப்படுத்தினால் சுவிஸ் பொருளாதாரம் சிதைந்துவிடும்" - லதன் சுந்தரலிங்கம்
Share
Subscribe
சுவிட்சர்லாந்தில் குடிவரவை பெரிய அளவில் குறைப்பதென்ற பிரேரணையை அந்நாட்டு மக்கள்கருத்தறியும் வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது. அந்நாட்டின் வருடாந்த நிகர குடிவரவை எண்பதாயிரத்திலிருந்து வெறும் பதினாறாயிரமாகக் குறைக்க முன்மொழியப்பட்ட பிரேரணையை வாக்களித்தவர்களில் 74 சதவீதம் பேர் நிராகரித்திருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன. சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடங்கள், வீட்டுவசதி, பொதுப்போக்குவரத்து போன்றவற்றில் காணப்படும் அழுத்தத்தை இந்த கொள்கையின் மூலமாக குறைக்கும் என இதனைக் கொண்டுவந்தவர்கள் வாதிட்டிருந்தனர். ஆனால் வேகமாக முன்னேற்றமடைந்துவரும் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தை இந்த கொள்கை கடுமையாக பாதிக்கும் என அந்நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் கூறிவருகின்றன. வேலைத்திறன் தேவைப்படும் தொழில்களில் ஐரோப்பியத் தொழிலாளர்களை சுவிட்சர்லாந்து பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அந்நாட்டின் எண்பது லட்சம் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர். குடிவரவை கட்டுப்படுத்துவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு சம்பந்தமாக சுவிட்சர்லாந்தின் சோஷலிஸ ஜனநாயகக் கட்சியில் குடிவரவு விவகார தெரிவுக் குழுவின் உறுப்பினரான லதன் சுந்தரலிங்கம் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
