முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவு யாருக்கு?
Share
Subscribe
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை இன்னும் எடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகின்றது.
இந்த பின்னணியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, அவரின் அழைப்பின் பேரில் நேற்று சனிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டக் கருத்துக்கள் தொடர்பிலும், புதிய அரசியல் களச் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாலுள்ள கேள்விகள் தொடர்பிலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
