இதொகா உறுப்பினர் இருவர் மைத்திரிக்கு ஆதரவு
Share
Subscribe
இலங்கையில் மலையகத்தின் முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்கள் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரான எம். உதயகுமார் மற்றும் நுவரெலிய பிரதேச சபை உறுப்பினரான நாகராஜா ஆகிய இருவருமே இவ்வாறு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், இவர்கள் தமது கட்சியின் முடிவுக்கு எதிராக மைத்திர்பால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தூள்ளனர்.
இதற்கான காரணங்கள் குறித்து உதயகுமார் அவர்களின் செவ்வியை இங்கே கேட்கலாம்.
