'சந்திரிகா குமாரதுங்க சென்ற இடத்தின் மீது தாக்குதல்'
Share
Subscribe
இலங்கையில், பேருவளை பிரதேசத்தில் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னணி அரசியல்வாதியான ஹிருணிகா ஆகியோர் இரவு உணவுக்காக சென்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள்கூறுகின்றன.
மேல் மாகாணசபயின் உறுப்பினரான இப்திஹார் ஜாமீல் அவர்களின் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் சுமார் 5 பேர் காயமடைந்த போதிலும், சந்திரிகா மற்றும் ஹிருணிகா ஆகியோருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இப்திஹார் ஜாமீல் கூறியுள்ளார்.
தனக்கும் இந்த தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
அதேவேளை இந்த தாக்குதல் சம்பவம் குறித்து குற்றஞ்சாட்டப்படும் தரப்பினர் மற்றும் போலிஸார் ஆகியோரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாக பலன் தரவில்லை.
