வேர்களை வெறுக்கும் விழுதுகள் 8 : வீட்டுச்சிறையில் வயோதிகர்கள்

Jan 18, 2015, 05:29 PM

Subscribe

சொந்தக் குடும்பத்திற்குள், தாம் பெற்ற பிள்ளைகளுடன் வாழும் வயோதிகர்களின் நிலைமை வெளிப்பார்வைக்கு மேம்பட்டதாக தோன்றினாலும், உண்மையில் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கூண்டுக்கிளிகளாக, வீட்டுச்சிறையில் வாழ்வதாகவே பல்வேறு களஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய முதியவர்களை அவர்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களே உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை என்பது முதல், உரிய நேரத்தில் மூன்றுவேளை வயிறார சாப்பாடு கொடுக்காமல் புறக்கணிப்பது வரை இவர்கள் சந்திக்கும் அன்றாட அவமானங்கள் அவர்களின் முதுமை வாழ்வை ஒருவித வீட்டுச்சிறைவாழ்வாக மாற்றியிருப்பதாக வெவ்வேறு அமைப்புகள் செய்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.