மதத் தலைவர்களுக்கு 'பத்ம விருதுகள்' வழங்குவது சரியா?

Jan 26, 2015, 04:21 PM

இந்தியாவில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் பத்ம விருதுகள் தொடர்ச்சியாக சர்ச்சையை ஏற்படுத்துகின்றன.

அவ்வகையில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளில் மதத் தலைவர்கள் பலரும் இடம்பெறுவது கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் கூடுதலான மதத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நால்வர் இந்து மதத் தலைவர்கள்.

இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் கண்டிக்கப்பட வேண்டியது என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் 'தி இந்து' நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் என் ராம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மதத் தலைவர்களுக்கு இப்படியன விருதுகள் வழங்கப்படவும் கூடாது, அப்படி வழங்கப்பட்டாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் ராம் கூறுகிறார்.

அவரது பேட்டியை இங்கே கேட்கலாம்.