ஜனவரி 28 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (28-01-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் முந்தைய ஆட்சியில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த ஆஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியானதே என்று ஆஸ்திரேலிய உயர்நீதினன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செவ்வி;
இலங்கை தொடர்பான ஐநா விசாரணைகள் பின்போடப்படுவதை எதிர்ப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கைக்குள் செய்தியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பான புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் கடல்வழியாகச்சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்துவைத்த ஆஸ்திரேலிய அரசின் செயல் சட்டப்படி சரியானதே என்று ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்திருப்பது குறித்து, ஆஸ்திரேலிய தமிழ்க்காங்கிரஸ் அமைப்பின் அகதிகளுக்கான செயற்பாட்டாளர் பாலவிக்னேஸ்வரனின் செவ்வி;
தமிழ்நாட்டின் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி உமாஷங்கர் கிறித்தவ மதபோதனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனே காரணம் என்று கூறும் ஐ ஏ எஸ் அதிகாரி உமாசங்கரின் பிரத்யேக பேட்டி;
ஐ ஏ எஸ் அதிகாரி உமாஷங்கரின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் மறுப்பு ஆகியவற்றைக் கேட்கலாம்.
