பிப்ரவரி 8 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 08, 2015, 07:51 PM

Subscribe

இன்றைய (08-02-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் கிழக்கு மாகாண சபையின் புதிய அரசில் நிபந்தனையின்றி இணைந்து கொள்ளும்படி தமிழ்த்தேசிய கூட்டபப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது குறித்த செய்திகள்;

இந்த அழைப்புக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் பதில்;

இலங்கை இராணுவத்தினர் வெளிநாட்டுப் பயிற்சிகளை பெறுவதில் உள்ள பிரச்சனைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக புதிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ஒஸ்ரின் பெர்ணான்டோ இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பிரதேச மக்கள் அவர்களது மீள் குடியேற்றம் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்துள்ளது குறித்த செய்திகள்;

ஹொங்காங்கின் நிர்வாகத் தலைவரின் படத்தை கழிவறைக் காகிதத்தில் அச்சடித்து, அங்குள்ள ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளர்கள் நூதனமான முறையில் முன்னெடுத்த முயன்ற போராட்டத்தை சீன அதிகாரிகள் முறியடித்துள்ளது குறித்த செய்திகள்;

நிறைவாக வேர்களை வெறுக்கும் விழுதுகள் தொடரின் பத்தாவது நிறைவுப்பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.