பிப்ரவரி 18 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (18-02-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை கிழக்குமாகாண அரசில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைய ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள்
கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக இன்று அம்பாரையில் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி;
இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் தோல்வியுற்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கை பிரதமராக்கக் கோரி இன்று நடந்த பேரணி குறித்த செய்திகள்
இந்திய அரசு கல்வித்துறைக்காக வசூலிக்கும் கூடுதல் வரியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்கிற புகார் குறித்த ஆய்வுக் கண்ணோட்டம்;
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீலகிரி பகுதியில் இரண்டு பேரை கொன்ற புலி இன்று சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்தி;
இந்தியாவில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இந்திய கடலோர காவல்படையின் உயர் அதிகாரிமீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது குறித்த செய்தி;
இன்றைய பலகணியில் இந்தியாவில் பாலியல் தொழிலை அங்கீகரிக்கும்படி எழுந்துள்ள கோரிக்கை குறித்து பிபிசியின் யோகிதா லிமாயியின் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.