'கிழக்கில் முஸ்லிம், தமிழ் கட்சிகளின் இணைவு கட்சி அரசியல் முடிவே'
Share
Subscribe
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் இணைந்துள்ளமை உடனடியாக பெரும் நன்மைகளை தந்துவிடாவிட்டாலும், எதிர்காலத்தில் இரு சமூகங்களும் அங்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து வாழ ஒரு முன்னோடியாக அது அமையலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனர்களின் ஒருவரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவருமான எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனிபா கூறியுள்ளார்.
இப்படியான ஒரு கூட்டு ஆட்சியை ஏற்படுத்துமாறு இரு வருடங்களுக்கு முன்னர் இரா. சம்பந்தன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் அப்போது கேட்டிருந்ததாக கூறும் ஹனீபா அவர்கள், ஆனாலும் இந்த இரு கட்சிகளும் தற்போது இணைவது என்று எடுத்த முடிவு ஒரு அரசியல் முடிவு மாத்திரமே என்றும் கூறுகிறார்.
இவை குறித்து அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.