புதுச்சேரி சிறுமிகள் பாலியல் அடிமைகளாக்கப்பட்ட வழக்கில் மேலுமொரு காவலர் சரண்
Share
Subscribe
புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டிருந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பொலிஸ்காரர்களில் இன்று மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் அடையாளம் காணப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருந்த ஆறு பொலிஸ்காரர்களின் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து காவல்துறையினர் தகவல் கோரியிருந்தனர்.
புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் தலைமறைவான காவலர்களின் புகைப்படத்தை வெளியிட்ட காரணம் பற்றி விசாரணைகளை நடத்திவரும் சிபிசிஐடி பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி பிபிசிக்கு வழங்கிய பேட்டியில், எஞ்சியுள்ள தலைமறைவான காவலர்களை விரைவாகப் பிடிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
தலைமறைவான காவலர்களை அவர்கள் தங்கியிருக்கக்கூடிய இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததாலும், இவர்களைப் பற்றி தகவல்தர பொதுமக்கள் தயங்குவதாகத் தெரியவந்ததாலும், புகைப்படங்களை வெளியிட்டு தகவல்கோரியதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் பின்னணி, பொலிசார் எடுத்துவரும் நடவடிக்கைகள் போன்றவை குறித்து அவர் தெரிவித்த தகவல்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.