மார்ச் 7 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (07-03-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதற்கு இலங்கை கடற்படைக்கு உரிமை உண்டு என்று இலங்கைப் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பான செய்திகள்;
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்திருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக் குழுவினர் பேசியவிடயங்கள் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் செவ்வி
இலங்கையில் சீகிரியா குகையில் உள்ள சுவரோவியம் ஒன்றில் பெயரை எழுதிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாயார், தனது மகள் செய்த தவறினை மன்னித்து அவரை விடுதலை செய்ய அதிகாரிகள் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உதயசிறியின் தாயார் சின்னத்தம்பி தவமணி பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி; தமிழ்நாட்டின் வேளாண்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நடைபெறுவிருந்த முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், நூற்றுக்கணக்கான விவசாயிகளை கைது செய்திருப்பது தொடர்பான செய்தி;
தன்னைத் தானே தபாலில் அனுப்பிக்கொண்ட அதிசய மனிதர் பற்றிய வித்தியாசமான செய்தி;
நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
