மார்ச் 17 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Mar 17, 2015, 05:05 PM

Subscribe

இன்றைய (17-03-2015) பிபிசி தமிழோசையில்

தன்மீதான விசாரணைகள் முடியும்வரை இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அர்ஜுன் மகேந்திரன் விடுமுறையில் செல்வார் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கை அரசின் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் கூடிய சிறுபான்மைக் கட்சிகள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன என்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் செவ்வி;

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் உயர் கல்வி அமைச்சர் ராஜிவ விஜேசிங்க தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு எதிர் கட்சியில் அமர்வதாக இன்று நாடாளுமன்றத்திற்குள் அறிவித்திருப்பது குறித்த செய்தி;

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐஏஎஸ் அதிகாரியான ரவி என்பவர் தற்கொலை செய்து மரணமடைந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்திருக்கும் இரண்டு கூட்டு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்த செய்தி;

பேஸ்புக், அதாவது முகநூலில் இனிமேல் என்னென்னவையெல்லாம் அனுமதிக்கப்படும் எவையெவையெல்லாம் அனுமதிக்கப்படாது என்பது குறித்த தனது புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த புதிய விதிமுறைகளின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடக செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவரும் லண்டன் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலனின் ஆய்வுக்கண்ணோட்டம்;

நிறைவாக இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், தூக்கம் கெடுவது நீரழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை அதிகப்படுத்துவதாக எச்சரிக்கும் முக்கிய ஆய்வின் முடிவுகள் குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு மற்றும் ஆட்டிசம் எனப்படும் கற்றல்குறைபாடு மரபணு வழியாகவே பெருமளவு தொடருவதாக கூறும் ஆய்வின் முடிவு குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.