ஏப்ரல் 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Apr 09, 2015, 04:38 PM

Subscribe

இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பகுதிகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளவை

நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலை அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு சரியாகிவிடும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளவை

இந்தியாவில் ஆரம்பக் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது பற்றிய ஒரு பார்வை

தன்னார்வ அமைப்பான கிரீன் பீஸின் இந்தியக் கிளையின் வங்கிக் கணக்குகளை அரசு முடக்கியுள்ளது பற்றிய செய்திகள்

ஆந்திராவின் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றார்கள் எனும் சந்தேகத்தின்பேரில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரத்தின் சிறப்புகள் தொடர்பில் வல்லுநர் கருத்துக்கள்

நேற்று காலமான எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் பாடகர் நாகூர் ஹனீஃபாவின் பங்களிப்பு குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன