மே 13 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 13, 2015, 05:03 PM

Subscribe

இன்றைய (13-05-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் முன்னாள் பாதுபாப்புச் செயலாளர் கொத்தாபய ராஜப்க்ஷவை கைது செய்வதற்குத் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது குறித்த செய்தி;

மட்டக்களப்பு காத்தான்குடியில் அண்மையில் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்திலுள்ள மனித உருவச் சிலைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று நகரசபைக்கு முன்பாக ஒரு தொகுதி முஸ்லிம்கள் ஆர்பாட்டம் செய்த்து குறித்த செய்தி;

திருகோணமலையின் நகரசபையில் சுகாதார பணியாளர்கள் நியமனங்கள் நடைபெறுவதில் முறைகேடுகள் இருப்பதாக தொழிலாளர் சங்கம் ஒன்று குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்தி;

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக கீழ்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டாளிகளையும் வழக்கில் இருந்து விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குளறுபடிகள் இருப்பதாகவும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்படி பாமக சார்பில் கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தகுதித்தேர்வு மொழிகள் பட்டியலில், தமிழ் மொழியையும் இணைக்க வேண்டும் என்று பாஜகவின் மாநிலங்களை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளது குறித்த செய்தி;

இந்த சர்ச்சையை தொல்லியல் துறை நிபுணர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஆர் நாகசாமியின் செவ்வி;

இன்றைய பலகணியில், இந்திய தீண்டாமையை மல்யுத்தம் உடைக்குமா? என்பதை ஆராயும் பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.