பிபிசி தமிழோசை ஜூன் மாதம் 7ஆம் தேதி

Jun 07, 2015, 04:49 PM

Subscribe

பிபிசி தமிழ் முக்கிய அறிவிப்பு

பிபிசி உலகசேவையின் ஒலிபரப்பில் ஞாயிற்றுக்கிழமை (07-06-2015) லண்டன் நேரப்படி மதியம் 3.30 மணிமுதல் மாலை 5 மணிவரையில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பிபிசி தமிழ் உட்பட பிபிசியின் பல மொழிச்சேவைகளின் வானொலி ஒலிபரப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் பிபிசி தமிழோசையின் முதல் 12 நிமிடநேர ஒலிபரப்பு சிற்றலை வானொலி மூலமாகவும், பிபிசி தமிழின் இணையதளத்தில் நேரலையிலும் ஒலிபரப்பாகவில்லை. இந்த தொழில்நுட்பக்கோளாறு 5 மணிக்கு சரிசெய்யப்பட்டபிறகு பிபிசி தமிழின் மீதமுள்ள நிகழ்ச்சி மட்டுமே வானொலியிலும், இணையத்திலும் பதிவானது. இந்த தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பிபிசி தமிழின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியை நேயர்கள் முழுமையாக கேட்கவியலாமல் போனதற்காக வருந்துகிறோம். தொழில்நுட்பக்கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. திங்கட்கிழமை (08-06-2015) பிபிசி தமிழ் நிகழ்ச்சி வழமைபோல சிற்றலையிலும், இணையதளம் மூலமும் முழுமையாக ஒலிபரப்பாகும்.

ஞாயிற்றுக்கிழமை (07-06-2015) பிபிசி தமிழோசை நிகழ்ச்சியின் பதிவு செய்யப்பட்ட பகுதியை நேயர்கள் இங்கே கேட்கலாம். நன்றி.

ஞாயிற்றுக்கிழமை (07-06-2015) பிபிசி தமிழோசையின் முக்கியச் செய்திகள்

இலங்கையின் மலையகப் பகுதிதியில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து நடத்திய போராட்டம்

இலங்கையில் பேரினவாத அமைப்புக்கள் பெரிதாக உருவெடுக்க காரணம் என்ன என்பதை அலசும் பெட்டகம்

வில்பத்து சரணாலயத்தில் தாங்கள் அத்துமீறி குடியேறவில்லை என்று விளக்கி முஸ்லீம்கள் முன்னேடுக்கும் கையெழுத்து இயக்கம்

சென்னை ஐஐடியில் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்பட்டது குறித்த செவ்வி