மாத்தரைக் கூட்டமும் மஹிந்த ஆதரவு அரசியலும்

Jun 13, 2015, 03:17 PM

Subscribe

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தென்னிலங்கையிலுள்ள மாத்தரை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றாலும் உரையாற்றவில்லை.

எனினும் அதில் பங்கேற்றவர்கள் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அவர் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

மாத்தரையில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் 70க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்தக் கூட்டம் வெளியிடும் செய்தி குறித்து, சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியர் ஆனந்த் பாலகிட்னர் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்து கொண்டக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.