ஜூன் 13 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய பிபிசி (13-06-2015) தமிழோசையில்
அமெரிக்கப் புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகள் பற்றிய அதிமுக்கிய இரகசியத் தரவுகளை சீனத்தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இணைய தாக்குதலாளிகள் இணைய வழியாக கைப்பற்றியிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள்;
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தென்னிலங்கையிலுள்ள மாத்தரை நகரில் நேற்று பெரிய கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ள நிலையில் மஹிந்தவின் மறுபிரவேசம் சாத்தியமா என்பது குறித்து சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியர் ஆனந்த் பாலகிட்னரின் ஆய்வுக்கண்ணோட்டம்;
ஒட்டுமொத்த இலங்கையிலும் அரசின் இலவச வைபை சேவைகளை யாழ்ப்பாணத்திலேயே அதிகமானவர்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்திருக்கும் தகவல் குறித்த ஒரு செவ்வி;
கூடங்களம் அணுமின் நிலையத்தின் எதிர்கால விபத்துக்காப்பீட்டுக்கு இந்திய அரசு 1500 கோடி நிதியை தோற்றுவித்திருப்பதாக அறிவித்திருப்ப்பது குறித்த செய்திகள்;
இறுதியாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
