"இனிமேல் சினிமா மட்டுமே; அரசியல் இல்லை" வடிவேலு

Jun 19, 2015, 05:50 PM

Subscribe

கணிசமான கால இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலு நடித்த எலி திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் பிபிசி தமிழோசையிடம் பேசிய நடிகர் வடிவேலு, இனிமேல் சிறிய வேடங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், கதாநாயகனாக மட்டுமே நடிக்கப் போவதாகவும் தெரிவித்தார். தன்னிடம் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படக் கதைகள் கைவசம் இருப்பதாகவும், இனிமேல் அரசியல் பக்கம் செல்லப்போவதில்லை என்றும் கூறினார்.