ஜூலை 11 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-05-2015) லண்டன் பிபிசி தமிழோசையில், இலங்கையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜாதிஹ ஹெல உறுமய ஆகிய கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது குறித்த செய்திகள்,
இலங்கையின் கிழக்கே அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி,
பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனும் ரத்துசெய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி,
இரண்டாம் உலகப் போர் காலத்து யூத இனப்படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான ஸ்ரெப்ரனீட்சா படுகொலைகளின் இருபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக போஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரனீட்சா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியது குறித்த செய்தி;
ஸ்கிட்ஸோஃப்ரினியா எனப்படும் மனச்சிதைவு நோயை ஏற்படுத்துவதில், புகைப்பிடித்தலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;
அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆறாவது முறையாக விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறித்த செய்தி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
