நாடாளுமன்றத் தேர்தல்: வடபகுதி மீனவர் கருத்து

Aug 09, 2015, 01:12 PM

Subscribe

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை வட இலங்கை மீனவர்கள் ஒரு நம்பிக்கையற்ற நிலையிலேயே எதிர்கொள்வதாக அவர்களை சந்தித்த எமது செய்தியாளர் கூறுகிறார்.

இந்திய மீனவர்கள் தமது பகுதிகளில் அத்துமீறி மீன்பிடிப்பதாலும், தென்பகுதி மீனவர்கள் தமது பகுதிகளில் ஊடுருவி மீன்பிடிப்பதாலும் தாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடபகுதி மீனவர்கள், இதனைத் தீர்க்க கடந்த காலங்களில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

அதேவேளை போரினால் இடம்பெயர்ந்த மீனவர்களுக்கும் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பலவிதமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், அவர்கள் ஒரு நம்பிக்கையற்ற நிலையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்வதாக அவர்களை பல இடங்களிலும் சென்று சந்தித்த எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் கூறுகிறார்.

இந்த விடயங்கள் குறித்த அவரது செய்திப் பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.