ஆகஸ்ட் 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 25, 2015, 04:52 PM

Subscribe

இலங்கையின் இறுதிகட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டில் நடைபெறவுள்ள விசாரணைகள் குறித்து அமெரிக்காவுக்கு கூறப்பட்டுள்ளதாக அரசு கூறுவது.

சம்பூர் பகுதியில் கல்வி மேம்பாட்டுக்காக அமெரிக்கா ஒரு மில்லியன் டாலர்கள் அளித்துள்ள செய்திகள்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு மிகவும் குறைவான அளவே பெண்கள் தேர்வாகியுள்ளது தொடர்பில் எழுந்துள்ள கவலைகள்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழக மீனவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு

இந்தியாவில் மத ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளவை.

அனைவருக்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன.