“பெண் வயாக்ரா” உரிய பலன் தருமா? ஆராய்கிறார் நாராயண ரெட்டி
Share
Subscribe
ஆண்களின் பாலியல் தேவைக்கு மிகப்பெரிய உறுதுணையாக பார்க்கப்பட்ட, இன்றளவும் உலக அளவில் ஆண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் வயக்ராவைப் போல, தற்போது அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட “பெண்களுக்கான வாயாக்ரா” என்று பரவலாக அழைக்கப்படும் பெண்களின் பாலியல் ஆசையைத் தூண்டும் அட்யி மாத்திரை உரிய பலன் தருமா? அட்யி மாத்திரை பெண்களின் பாலியல் ஆசையைத் தூண்டி இன்பத்துக்கு வழிகோலுமா அல்லது இதன் பல்வேறு பக்கவிளைவுகள் எதிர்பாரா துன்பத்தைக் கொடுக்குமா? ஆண்களின் வயாக்ராவுக்கும் இந்த “பெண்களின் வயாக்ரா”வுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன? வேற்றுமைகள் என்ன? விரிவாக ஆராய்கிறார் சென்னையில் இருக்கும் பாலியல் மருத்துவ நிபுணர் நாராயண ரெட்டி
