செப்டம்பர் 5, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 05, 2015, 04:34 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில், குடியேறிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைவதை அனுமதிப்பதற்காக ஆஸ்திரியாவும் ஜெர்மனியும் தங்களின் எல்லைகளை திறந்துவிட்டுள்ளது குறித்த செய்தி, இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990ஆம் ஆண்டில் தஞ்சம்புகுந்தவர்களில் 158 பேர் காணாமல் போனதன் 25வது ஆண்டு நினைவு தினம் குறித்த தகவல்கள், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கையெழுத்து இயக்கம் குறித்த செய்திகள், இந்தியாவில் முன்னாள் ராணுவத்தினருக்கு பதவியின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள், பிபிசி தமிழோசை குறித்த நேயர்களின் கருத்துக்களை சுமந்துவரும் நேயர் நேரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.