மறைந்து வரும் மங்கல இசை: பகுதி 2

Sep 20, 2015, 05:22 PM

Subscribe

இந்தியா சுதந்திரம் அடைந்து நேரு பிரதமராகப் பதவியேற்ற சமயம் முதலில் வாசிக்கப்பட்ட மங்கல இசை நாகஸ்வரம்.

தமிழர்களின் மங்கல இசையான நாகஸ்வரம் மற்றும் தவில் பல நூற்றாண்டுகள் நீடித்து வாழும் இசைக் கருவிகள்.

சங்க இலக்கியம் முதற்கொண்டு சிலப்பதிகாரம் வரை, இந்த மங்கல இசைக் கருவிகள் தொடர்பான சான்றுகள் பதியப்பட்டுள்ளன என்கிறார்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல ஆண்டுகள் ஆய்வு செய்துள்ள குடவாயில் பாலசுப்ரமணியம் மற்றும், மதுரை இசை ஆர்வலரும் ஆய்வாளருமான நா.மம்மது ஆகியோர்.

காலவோட்டத்தில் வடிவமைப்பில் பல மாறுதல்களை கண்டிருந்தாலும், அடிப்படை அமைப்பில் நாகஸ்வரம் உருமாறவில்லை எனக் கூறும் மூத்த இசை அறிஞரும், மங்கல இசை மன்னர்கள் எனும் நூலை எழுதியவருமான பி.எம்.சுந்தரம் அவரகள், நாதஸ்வரமா அல்லது நாகஸ்வரமா எனும் கேள்விக்கு இந்த நிகழ்ச்சியில் பதிலளிக்கிறார்.

மங்கல இசை சிறப்புத் தொடரை தயாரித்து வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்.