இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய அரசை நிர்பந்திக்க முடியாத தமிழக கட்சிகள், ஐநாவில் போய் அமெரிக்காவை எதிர்ப்பது ஏன்?
Share
Subscribe
இலங்கையில் நடந்த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கொண்டுவரும் வரைவுத் தீர்மானத்தை இலங்கைக்குள் இருக்கும் பிரதான தமிழ்க் கட்சிகளின் ஒன்றியமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் அமைப்புக்களில் பெரும்பாலானவையும் ஆதரித்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவை அதை நிராகரிப்பதும் தீவிரமாக எதிர்ப்பதும் ஏன் என்பது குறித்தும்;
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவணரசு மீது நிர்ப்பந்தம் செய்து அதன் நிலைப்பாட்டை மாற்ற முடியாத தமிழக கட்சிகளும் தலைவர்களும் ஐநா மட்டத்தில் அமெரிக்காவை எதிர்ப்பது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தியாகு பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியின் ஒலி வடிவம்
