“நடிகர்சங்கத் தேர்தல்: தொலைக்காட்சிகளின் செய்தி வெறுமைக்கு சான்று”
Share
Subscribe
ஞாயிறன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒட்டுமொத்த தேர்தலையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் தமிழ்நாட்டின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் செய்தி வறுமையை மிகத்தெளிவாக காட்டக்கூடிய ஒரு நிகழ்வு என்று சாடுகிறார் எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரன்.
சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இது குறித்து மனுஷ்யபுத்திரன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.