அக்டோபர் 23, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (23-10-2015) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியிருப்பது குறித்த செய்தி;
இலங்கை போலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்ரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துவதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கண்டித்துள்ளது குறித்து தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான சுந்தரம் மஹேந்திரனின் செவ்வி;
இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் இன்றுகாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவை பிணையில் செல்ல நீர்க்கொழும்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளது குறித்த செய்தி;
இந்தியாவின் சாகித்திய அகாதமியின் செயற்குழுவின் இன்றைய கூட்டத்தில், கல்புர்கி கொலை சம்பவம் உள்ளிட்ட, சமீப காலங்களில் அரங்கேறிய கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த செய்திகள்
இந்தியாவில் இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட ஹரியானா மாநிலத்தில் தலித் சிறுவன் காவல்துறையின் தடுப்புக் காவலில் கொல்லப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.