'எதிர்க்கும் அறிவு ஜீவிகள் எல்லோரும் இடதுசாரிகள் என்பது கொச்சைப்படுத்தும் வாதம்'- என்.ராம்

Oct 29, 2015, 04:00 PM

Subscribe

இந்தியாவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் ,வரலாற்றாய்வாளர்கள் இப்போது விஞ்ஞானிகள் என அறிவு ஜீவிகள் பலரும் பாஜக ஆட்சியில் நிலவுவதாகக் கூறப்படும் சகிப்புத்தன்மையற்ற சூழலுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் தருவது, மற்றும் தங்களுக்குத் தரப்பட்ட விருதுகளைத் திரும்பத் தருவதுபோன்ற போக்குகள் மேலும் வலுப்படும் உத்வேகம் பெறும் என்கிறார் இந்து நாளிதழ் குழுமத்தின் தலைவரும், பிரபல பத்திரிகையாளருமான என்.ராம்.