தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதது குற்றமல்ல: சந்துரு
Share
Subscribe
இந்தியாவில் திரையரங்கு ஒன்றில் தேசிய கீதம் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்போது எழுந்து நிற்க மறுத்த ஒரு குடும்பத்தினரை, மற்றவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேற்றியதாக வந்த ஒரு காணொளி, தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்பது சட்டரீதியாக கட்டாயமானதா என்ற கேள்வியை பலரது மனதில் எழுப்பியிருக்கிறது.
இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே சந்துரு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காதது குற்றமல்ல என்று கூறினார்.
கேரள பள்ளிமாணவன் தேசிய கீதம் பாட மறுத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்திருப்பதாக தெரிவித்த சந்துரு, தேசிய கீதம் பாடமறுப்பதோ, பாடும்போது எழுந்து நிற்க மறுப்பதோ குற்றச்செயல் அல்ல என்றும் வலியுறுத்தினார்.
