மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடரின் 11ஆம் பகுதி
Share
Subscribe
தமிழகத்தில் பாரம்பரிய இசைக்கு இஸ்லாமியர்களின் பங்கு தொடர்ந்து இருந்துள்ளதற்கு பல சான்றுகள் உள்ளன.
கடந்த பல தசாப்தங்களை ஒப்பிடும்போது இன்று மங்கல இசையைப் பொருத்தவரையில் வெகு சில இஸ்லாமியர்களே அதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் ஷேக் சின்ன மௌலா அவர்களின் வாரிசுகளான காசிம்பாபு சகோதரர்கள் மற்றும் ஷேக் சுபானி மற்றும் காலிஷாபீ தம்பதியினர்.
நாகஸ்வர உலகில் ஷேக் சுபானி மற்றும் காலிஷாபீ தம்பதியனருக்கு தனியிடம் உள்ளது என பிபிசி தமிழோசையிடம் கூறினார் தஞ்சையிலுள்ள இசை ஆர்வலரான நாகராஜன் சிவராமகிருஷ்ணன்.
பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நடத்தும் தொழுகையில் இசை பின்னிப் பிணைந்துள்ளது எனக் கூறும் ஷேக் மஹ்பூப் சுபானி, இஸ்லாத்தில் இசைக்கு இடமில்லை எனக் கூறுவது தவறு என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அந்தக் கருத்துடன் முற்றாக உடன்படுகிறார் அவரது மனைவி காலிஷா பீ
