பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- டிசம்பர் 06

Dec 06, 2015, 07:34 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்....

  • வௌ்ளப்பெருக்கின் பாதிப்புகளை சந்தித்துள்ள தமிழகத்தில் நிவாரணப் பணிகள் தொடரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என்ற வந்துள்ள எச்சரிக்கை பற்றிய செய்திகள்..

  • மழைவெள்ளம் காரணமாக தமிழகத்தின் காவேரி டெல்டா மாவட்டங்களில் லட்சக் கணக்கான ஏக்கர் நெற்செய்கை நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வெளியிடும் கவலைகள்..

  • இலங்கையில், தமிழ்க் கைதிகளின் விடுதலையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதன் தலைவர் சம்பந்தன் அளிக்கின்ற பதில்...

  • லண்டனில் நேற்றிரவு ரயில் நிலையம் ஒன்றில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலை பயங்கரவாதத் தாக்குதலாக கருதி அதிகாரிகள் விசாரணைகளைத் துவங்கியிருப்பது பற்றிய குறிப்பு...

  • மறைந்து வரும் மங்கல இசை சிறப்புத் தொடரில், தமிழர்களின் பாரம்பரிய இசைக் கலைக்கு இஸ்லாமியர்களின் மேலும் சில பங்களிப்புகளை ஆராயும் 11-வது பாகம்