டிசம்பர் 17, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 17, 2015, 05:34 PM

Subscribe

இன்றைய (17-12-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கை அரசு கொண்டுவரவிருந்த இனங்களுக்கிடையில் வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களை தெரிவிப்பதை தடைசெய்யும் சட்டத்தை திரும்பப்பெறுவதாக அரசு அறிவித்திருப்பது குறித்த செய்தி;

கால்நடை அபிவிருத்தி பணிகளுக்காக அம்பாறை, பானம பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளில் பலவந்தமாக முஸ்லிம் மக்கள் நுழைந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமை சட்டவிரோத செயல் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்ப்பளித்துள்ளது குறித்த செய்தி;

தமிழ்ப் படைப்பாளிகளுக்கான 2015ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் ஆ. மாதவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது குறித்த செய்தி;

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல குடியிருப்புப் பகுதிகளில் இன்னமும் வெள்ளம் வடியாத சூழல் நீடிப்பது ஏன் என்பதை ஆயாயும் செய்தித்தொகுப்பு;

சென்னை வெள்ளத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு ஏற்பட்ட பெருமளவிலான பாதிப்புகள் குறித்த ஒரு செவ்வி;

சென்னை பெருவெள்ளக்காலத்தில் இறந்தவர் சடலங்களை அடக்கம் செய்வதில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் சந்தித்த பெரும் சிக்கல்கள் குறித்த ஒரு செய்தித்தொகுப்பு;

இஸ்லாமிய அரசுக் குழுவின் வருமான வழிகளை துண்டிப்தை நோக்காக கொண்ட தீர்மானம் ஒன்றின் மீது வாக்களிக்க ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் 15 பேரும் கூடியுள்ளதன் பின்னணியை விளக்கும் பிபிசியின் ஆய்வுக்கண்ணோட்டம்;

புற்றுநோயாளர்களில் 90 சதவீதம் பேருக்கு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறைத் தெரிவுகள் போன்ற புறக்காரணிகளே நோய்க்கான காரணம், அவர்களின் 'துரதிருஷ்டநிலை அல்ல' என்று புதிய ஆய்வொன்று கூறியிருப்பது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.