பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- டிசம்பர் 21
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இந்தியத் தலைநகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், ஓடும் பேருந்தில் மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளில் ஒருவரின் விடுதலையை தடுக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பற்றிய ஒரு பார்வை...
ஐநாவின் மனித வள மேம்பாட்டு அறிக்கையில், இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் நிலைகுறித்த ஓர் அலசல்
இந்திய மீனவர்களின் அத்தூமீறல்களால், தொடர்ந்தும் பெரும் இழப்புகளை சந்தித்துவருவதாக கூறும் வட-இலங்கை மீனவர்களின் குமுறல்கள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்படக்கூடும் என்று இருதரப்பிலும் வெளியாகியுள்ள உறுதிப்படுத்தல்கள்
விளையாட்டரங்கத்தில், ஃபிஃபா ஊழல் விவகாரத்தில் செப் பிளாட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள எட்டாண்டு தடை உள்ளிட்ட செய்திகள்
ஆகியவை கேட்கலாம்
