டிசம்பர் 23, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 23, 2015, 04:29 PM

Subscribe

இன்றைய (23-12-2015) பிபிசி தமிழோசையில்

சவுதியில் வேலைக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணை 'கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து' செய்யப்பட்டிருப்பதாக இலங்கை துணைஅமைச்சர் ஹர்ஷ் டி செல்வா தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத குடியிருப்புக்களை உருவாக்கியதாக தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மறுத்திருப்பது குறித்த செய்தி;

இலங்கையின் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பாதுகாப்பு வாகனத்தை பயன்படுத்தி ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது 6 ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் தம் கூட்டணிக்கு வரும்படி திமுகவும் மக்கள் நலக் கூட்டியக்கமும் விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுத்திருப்பது குறித்த செய்தி;

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்கார்ருமான கீர்த்தி ஆசாத் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் மூலம் வழி செய்யும்படி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்கு கோரிக்கை வைத்திருப்பது குறித்த செய்தி;

சிரியாவில் ரஷ்யா மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவதாக அம்னெஸ்டி இண்டர் நேஷனல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது குறித்த செய்தி; இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறும் சமயத்தில் அவர்கள் தடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையைத் தோற்றுவித்திருப்பது குறித்த செய்தி;

ஆபத்தான நோயால் அவதியுற்று வந்த ஆண் குழந்தைக்கு அவரது சகோதரியின் குருத்தணுச் செல்களை செலுத்தி பிரிட்டன் மருத்துவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றியிருப்பது குறித்த செய்தி;

சந்தையில் விற்கப்படும் போலியான பொருட்களை இனங்கண்டுகொள்ளும் புதிய தொழில்நுட்பம் ஒன்றை ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.