"தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி சூடுபிடிக்காதது ஏன்?
Share
Subscribe
தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான மாநில அரசின் கொள்கை 2012 ஆம் ஆண்டே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நோக்கத்துடன் தமிழக அரசு சில பல தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் செய்துகொண்டு, பல்வேறு அரசாங்க சலுகைகளையும் அளித்தது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கப்படவே இல்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசாங்கம் அறிவித்தபடி தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி ஏன் துவங்கப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசின் மின்வாரியத்தின் தாயாரிப்புப் பிரிவின் உறுப்பினர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு காரணிகளை பட்டியலிடுகிறார்.
சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு ஆகும் மிகவும் கூடுதலான மூலதனச் செலவு; சூரிய ஒளி மின்சார உற்பத்தி செலவை விட குறைவாக அந்த மின்சாரத்தை தனக்கு விற்கும்படி தமிழக அரசு நிர்ணயிக்கும் கட்டுப்படியாகாத விலை ஆகிய இரண்டு காரணங்களால் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனங்கள் தமது தயாரிப்பை துவங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.
தமிழகத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்தித்துறையின் பிரச்சனைகள் குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
