டிசம்பர் 29, 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 29, 2015, 05:21 PM

Subscribe

இன்றைய (29-12-2015) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 700 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித்தரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்த செய்திகள்;

இலங்கையில் அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் தாங்கள் உரிய முறையில் உள்வாங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது குறித்த செய்தி;

இந்தியாவில் தலித் தொழில் முனைவோர் தொடர்பான மாநாட்டில் பிரதமர் அறிவித்திருக்கும் சலுகைகள் குறித்து தமிழ்நாட்டு தலித் தொழில் முனைவோர் சங்கத் தலைவரின் கருத்துக்கள்;

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கைதுசெய்ய உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஜனவரி ஐந்தாம் தேதிவரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;

2015 ஆம் ஆண்டில் தமது தொழில் காரணமாக மொத்தமாக 69 செய்தியாளர்கள் பலியாகியுள்ளதாக சிபிஜே எனப்படும் ஊடகவியாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

நிறைவாக அனைவர்க்கும் அறிவியல் ஆகியவற்றைக் கேட்கலாம்.