நான்கு புதிய தனிமங்கள் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன?
Share
Subscribe
வேதியியல்துறையில் தனிமம் என்றும் மூலகம் என்றும் அழைக்கப்படும் வேதிப்பொருளின் அடிப்படை அலகுக்கும் ஓர் அணு எண் உண்டு.
இப்படியான தனிமங்களின் அணுஎண்களை வரிசைப்படுத்திய அட்டவணை ஆங்கிலத்தில் Periodic table என்றும் தமிழில் தனிம அட்டவணை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனிம அட்டவணையில் இதுவரை 114 தனிமங்கள் அவற்றின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் பொதுத்தன்மைகளுக்கேற்ப அணு எண்கள் கொடுக்கப்பட்டு வரிசைக்கிரமப்படி பட்டியலிடப்பட்டிருந்தன.
அந்த அட்டவணையில் நான்கு இடங்கள் காலியாக இருந்தன. அந்த விடுபட்டிருந்த நான்கு இடங்களுக்கும் பொருந்தக்கூடிய நான்கு தனிமங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் உயிர் பவுதிகத்துறை முனைவரும் முன்னாள் பேராசிரியருமான மு சுந்தரமூர்த்தி.
அவரது செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
